இறைவனின் தரிசனத்தை, இருந்த இடத்திலிருந்தே பெற்றிட உதவும் ஒரு கருவியே "சிவச்சக்கரங்கள்." வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் தடைகள் ஊழ்வினைப் பயனால் நடப்பவையே. அத்தடைகளை நீக்கி நமக்கு நல்வாழ்வை அருளும் ஒரு சாதனமே “சக்கர வழிபாடு ஆகும்.” ஒளியும் - ஒலியும் சேர்ந்த வழிபாடாகப் போற்றப்படுவதே யந்திர வழிபாடாகும். அட்சரங்கள் அமைக்கும் முறையறிந்து அமைத்து, தெய்வீக மந்திரங்களை அதில் பதிந்து, மந்திரங்களினால் உயிர்கொடுத்து, ஆகம முறைப்படி தயார்செய்த யந்திரங்களை வழிபட்டோரை, இறைவன் கைவிட்டார் இல்லை என்பது சத்தியம்.